×

ஆபாச படங்களுக்கு தடைக்கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மகாலட்சுமி பவானி என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் சிறு நகரங்களில் இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்து. இதுபோன்ற விவகாரத்தில் முன்னதாக பல வழக்குகளில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அது ஒழுங்காக நடைமுறைப் படுத்தப்படவில்லை.

அதனால் கடுமையான சட்டங்களை அமல்படுத்தினால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். எனவே ஆபாச படங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் பொதுபோக்குவரத்தில் நடந்துகொள்ளும் முறை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக நாடு முழவதும் பொதுவான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘தண்டனை மற்றும் தண்டனைச் சட்டங்களில் நாம் எங்கே பின்தங்கி இருக்கிறோம் என்பதைப் ஆராய வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.

The post ஆபாச படங்களுக்கு தடைக்கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union ,governments ,New Delhi ,Mahalakshmi Bhavani ,Kolkata ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...