×

அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார் சிவசேனா எம்எல்ஏ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா தொகுதி சிவசேனா எம்எல்ஏ நரேந்திர போண்டேக்கர். இவர் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தார். அப்போதே அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஷிண்டே உறுதி அளித்திருந்ததாக நரேந்திரா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ தேர்தலில் வெற்றி பெற்றால் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படும் என சிவசேனா உறுதி அளித்தது. இதனால் சிவசேனாவில் சேர்ந்தேன். அமைச்சரவை விரிவாக்கத்தில் எனக்கு பதவி வழங்கவில்லை. இதை கண்டித்து சிவசேனா துணை தலைவர் பதவி மற்றும் கிழக்கு விதர்பா மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.

* தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன்புஜ்பாலும் அதிருப்தி
புதிய அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களான சகன் புஜ்பால்,திலீப் வால்சேபாட்டீல், பாஜவை சேர்ந்த சுதிர் முங்கண்டிவார்,விஜய்குமார் காவிட் உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்காததால் முன்னாள் துணை முதல்வரும் அமைச்சருமான சகன் புஜ்பால் அதிருப்தியுற்றுள்ளார். அவர் நேற்று கூறுகையில், ‘‘அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. எனினும் எதிர்கால திட்டம் குறித்து தொகுதி மக்களுடன் பேசி முடிவு செய்வேன்’’ என்றார்.

The post அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார் சிவசேனா எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Shiv Sena ,MLA ,Mumbai ,Shiv Sena MLA ,Narendra Pondekar ,Bhandara ,Maharashtra ,2019 elections ,Eknath Shinde ,led government ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிராவில் 39 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு