×

மாநிலங்களவையில் 6 புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு

புதுடெல்லி: முன்னாள் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, தொழிலதிபர் சனா சதீஷ் பாபு உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் 6 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நேற்று பதவி ஏற்றனர். முன்னாள் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா பா.ஜ சார்பில் அரியானாவிலும், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் தொழிலதிபர் சனா சதீஷ் பாபு, பீடா மஸ்தான் ராவ் , பாஜ சார்பில் ரியாகா கிருஷ்ணய்யா ஆகியோர் ஆந்திராவில் இருந்தும், பாஜவின் சுஜீத் குமார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ரிதபிரதா பானர்ஜி ஆகியோர் மேற்குவங்கத்தில் இருந்தும் மாநிலங்களவை எம்பிக்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று பதவி ஏற்றனர். அதை தொடர்ந்து உறுப்பினர் பதிவேட்டில் கையொப்பமிட்டனர். அவர்களை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வாழ்த்தினார்.

The post மாநிலங்களவையில் 6 புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Rajya ,Sabha ,New Delhi ,National Commission for Women ,chairperson ,Rekha Sharma ,Sana Satish Babu ,Rajya Sabha ,Former ,Rekha Sharma… ,Dinakaran ,
× RELATED அமெரிக்க தொழில் அதிபருடன் காங்கிரசை...