நாகர்கோவில், டிச.17: நாகர்கோவில் தெற்கு மண்டலத்தில் 16.50 லட்சம் செலவில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது. நாகர்கோவில் தெற்கு மண்டலத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.16.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. நேற்று காலை புன்னைநகர் பகுதியில் இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் நவீன்குமார், திமுக மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post புன்னைநகரில் சாலை சீரமைப்பு பணி appeared first on Dinakaran.