திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்

 

திருவாரூர், டிச.17: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விசாயிகளின் நெற்பயிர் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும், விவசாயிகளின் வேளாண் கடன்கள் முழுவதையும்தள்ளுபடி செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு று த்திதேசிய தலைவர் ஜெத்ஹிக்சிங் தலைமையில் பஞ்சாபில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உடனடியாக தேசிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திட கோரியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று திருவாரூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புதுவை மாநிலம் காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை திருவாரூர் ரயில் நிலையத்தில் காலை 10.30 மணியளவில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் குருசாமி, பொருளா ளர் நடராஜன் உட்பட50 பேர்களை திருவாரூர்டவுன் போலீசார் கைது செய்து நாகை பைபாஸ் சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

The post திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: