திருத்துறைப்பூண்டியில் பனி மூட்டத்தால் தொழிலாளர்கள் சிரமம்

 

திருத்துறைப்பூண்டி, டிச. 17: திருத்துதுறைப்பூண்டியில் பனிமூட்டத்தால் அதிகாலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் மழை ஒரு புறம் பெய்தாலும், பனி மூட்டமும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பனிமூட்டமானது மாலை 4 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 10 மணி வரை நீடிக்கிறது. பனி அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பத்துடன் தொழிலாளர் வேலை செல்வது ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மழைபெய்தால் குடைபிடித்துச் செல்லும் பொதுமக்கள் தற்போது மழை இல்லாவிட்டாலும் பனியிலிருந்து தப்பிக்க தலையில் காதுவரை மறைக்கும் குல்லா அணிந்து செல்கின்றனர்.

இதற்காக இந்த சீசனில் பனிக்குல்லா, தலைப்பாகை போல் கட்டுக்கொள்வதற்கு மப்ளர், தலையின் பின்புறத்திலிருந்து காதை மட்டும் மறைத்துக்கொள்ளும் அரையளவு தொப்பி என விதவிதமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி பொதுமக்கள் வாங்கி அணிந்து கொள்கின்றனர். மார்கழி மாதம் முழுவதும் பனி அதிகமாக இருக்கம். நேற்று மார்கழி முதல் நாள் பனி அதிகம் காணப்பட்டது. பணி அதிகம் இருந்து மழை இல்லை என்றால் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என பொ து மக்கள் தெரிவித்தனர்.

The post திருத்துறைப்பூண்டியில் பனி மூட்டத்தால் தொழிலாளர்கள் சிரமம் appeared first on Dinakaran.

Related Stories: