ஒட்டன்சத்திரம், டிச. 17: ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மாதாந்திர பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் சங்கீதா, ஒன்றிய துணை தலைவர் காயத்திரி தேவிதர்மராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ) வடிவேல் முருகன், (கி.ஊ) காமராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் பழனிச்சாமி, செல்வி, ஜென்சி, நாச்சிமுத்து, செல்வி, முத்து, யாகவன், பிரகாஷ், சண்முகம், கண்மணி கருணாதேவி, சின்னத்தாய், ரேவதி, ராமராஜ், செல்வி, மகமாயி, சுமித்ரா, ராசியப்பன், கணக்காளர் ஜெகதீஸ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் appeared first on Dinakaran.