ரூ.24.8 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆறு சீரமைப்பு பணி: அமைச்சர்கள் ஆய்வு

குன்றத்தூர்: சென்னையில் ரூ. 24.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அடையாறு ஆற்று சீரமைப்பு பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணப்பாக்கம் பகுதி வெகுவாக பாதிக்கப்படும். இப்பிரச்னைக்கு தீர்வாக, மணப்பாக்கம் வழியாக செல்லும் அடையாறு ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தி, நடைபயிற்சி தளம் அமைக்கும் பணிகள், நீர்வளத்துறை சார்பில் ரூ.24.8 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.

இந்த பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு ஆய்வு செய்தனர். மணப்பாக்கம் வழியாக செல்லும் அடையாற்றை தூர்வாரி, அகலப்படுத்தி, கரையை உயர்த்தியதால் மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய பகுதிகள் அண்மையில் பெய்த மழையில் மழைநீர் தேங்காமல் அடையற்றில் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் மணிமாறன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ரூ.24.8 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆறு சீரமைப்பு பணி: அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: