- திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாலமக பொதுக்குழு கூட்டம்
- ஜி. கே மணிநேரம்
- திருவள்ளூர்
- தமிழ்நாடு
- திருவண்ணாமலை
- ராமதாஸ்
- Bamaka
- ரா. அன்புமணி ராமதாஸ்
- திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாலமக பொதுக்குழு கூட்டம்
- கிராம்.
- கே
- மணி
- தின மலர்
திருவள்ளூர்: வேளாண் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தமிழ்நாடு உழவர் பேரியக்க மாபெரும் மாநாடு வரும் 21ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் ரா.அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்ற உள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் விவசாயிகள் மற்றும் பாமக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மணவாளநகரில் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட செயலாளர், மாவட்ட கவுன்சிலர் இ.தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எம்.பிரகாஷ், ஆலப்பாக்கம் ஏ.சேகர், சி.ஆனந்த கிருஷ்ணன், சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பா.விஜயன் வரவேற்றார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக கவுரத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழ்நாடு உழவர் பேரியக்க மாபெரும் மாநாடு குறித்தும், விவசாயிகள் மற்றும் பாமக தொண்டர்களை எவ்வாறு அழைத்து வர வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இதில் மாநில இளைஞரணி சங்க செயலாளர் வ.பாலயோகி, மாநில துணைத் தலைவர் ஜெயவேல், மாநில சமூக முன்னேற்ற சங்க செயலாளர் செல்வம், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் ஆலப்பாக்கம் ஏர்.ஆர்.டில்லி பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சே.பூபதி, மாவட்ட நிர்வாகிகள் கேசவன், அன்பு, குமார், ரவி, பாண்டுரங்கன், ரமேஷ், கவிஞர் சித்ரா, காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், சசிகலா, கௌரி, அஞ்சலி, அமுதவல்லி, ஒன்றிய, நகர செயலாளர்கள் விஜயராகவன், கேசவன், வினோத், சுரேஷ், ஏழுமலை, கண்ணன், அன்பு, சேகர், கார்த்திக் உட்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், வரும் 21ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் உழவர் பேரியக்க விவசாயிகள் மாநாட்டிற்கு விவசாயிகள் மற்றும் பாமகவினர் திரளாக பங்கேற்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும், வரும் 24ம் தேதி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும், வெங்கத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்: ஜி.கே.மணி எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.