×

வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பால தடுப்பு கம்பி வழியாக மாணவர்கள் ஆபத்தான பயணம்

பூந்தமல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, மதுரவாயலில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. தற்போது, வரை தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு நேற்று வந்த மாணவர்கள் சிலர், இந்த தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் ஆபத்தான முறையில் நடந்து சென்றனர். சிலர், தரைப்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளின் மீது மெல்ல மெல்ல நடந்து சென்றனர்.

வழக்கமாக இந்த தரைப்பாலம் வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மாற்று வழியில் சென்றால், நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஆபத்தை உணராமல் கல்லூரி மாணவர்கள் கூவம் ஆற்றின் தரைப்பாலத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது ஆபத்தான முறையில் நடந்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே தரைப்பாலத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருக்கெடுத்து ஓடிய இந்த வெள்ள நீரில் காரில் சென்றவர் அடித்து செல்லப்பட்டு, பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டார். இந்தப் பகுதியில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி தரைப் பாலத்தில் யாரும் செல்லாதவாறு தடுத்து இருந்தனர். ஆனால் மாணவர்கள் சிலர் அதையும் மீறி சென்றுள்ளனர். இதையடுத்து தற்போது போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

The post வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பால தடுப்பு கம்பி வழியாக மாணவர்கள் ஆபத்தான பயணம் appeared first on Dinakaran.

Tags : Poonamalli ,Chennai ,Coovam river ,Maduravoyal ,
× RELATED விவசாயிகளை ஊக்குவிக்க பயிர்...