×

நடைபயணமாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்

திருத்தணி: கார்த்திகை மாதம் தொடங்கியதும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடியுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் படி திருத்தணியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் கடைபிடித்து வந்தனர். கார்த்திகை மாதத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் தணிகாச்சலம்மன் கோயிலில் இருமுடி கட்டிக் கொண்டு கேரளா மாநிலம் சபரிமலைக்கு நடைபயணம் தொடங்கினர். 950 கி.மீ தூரம் நடைபயணமாக சென்று ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். ரயில், பேருந்து, கார்களில் பயணம் செய்து ஐயப்ப சாமியை தரிசனம் செய்து வரும் நிலையில், திருத்தணியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நடந்து சென்று ஐயப்ப சாமிக்கு இருமுடி செலுத்த இருப்பதை அறிந்து சக ஐயப்ப பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.

The post நடைபயணமாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Sabarimala ,Tiruttani ,Karthigai ,
× RELATED மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோயிலில் படி பூஜை