×

விவசாயிகளை ஊக்குவிக்க பயிர் விளைச்சல் போட்டி: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

திருவள்ளூர்: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில், கேழ்வரகு. கம்பு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களில், பயிர் விளைச்சல் போட்டிகள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட உள்ளன. போட்டியில் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் பங்கு பெறலாம். சாகுபடி பரப்பு 2 ஏக்கர் இருக்க வேண்டும். செம்மை நெல் சாகுபடி முறையிலும், பாரம்பரிய நெல் சாகுபடி முறையிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட அளவில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

மாநில அளவில் நடத்தப்படும் பாரம்பரிய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டிக்கு பதிவு கட்டணம் ரூ.150. போட்டிக்கான கடைசி அறுவடை தேதி 15.03.2025. இந்த போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் நடத்தப்படும் செம்மை நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டிக்கு பதிவு கட்டணம் ரூ.150. போட்டிக்கான கடைசி அறுவடை தேதி 15.04.2025. இந்த போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு பரிசு தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படும். மாநில அளவில் நடத்தப்படும் இதர பயிர்களுக்கான போட்டிகளுக்கு பதிவு கட்டணம் ரூ.150. போட்டிக்கான கடைசி அறுவடை தேதி 15.03.2025. இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.

மேலும் மாவட்ட அளவிலான நெல், பச்சைபயறு மற்றும் நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டிகளுக்கு பதிவு கட்டணம் ரூ.100. போட்டிக்கான கடைசி அறுவடை தேதி 15.03.2025. இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். எனவே அனைத்து விவசாயிகளும் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் த.கலாதேவி தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகளை ஊக்குவிக்க பயிர் விளைச்சல் போட்டி: வேளாண்மை இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Department of Agriculture and Farmers Welfare ,Kezvaragu ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...