- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- அமுடா ஐஏஎஸ்
- அதுல் ஆனந்த்
- சுதீப் ஜெயின்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், அமுதா ஐஏஎஸ், அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு முதன்மை செயலாளர் பதவியிலிருந்து கூடுதல் தலைமை செயலாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இவர்களில் அதுல் ஆனந்த், அமுதா ஐஏஎஸ், காகர்லா உஷா, செல்வி அபூர்வா ஆகியவர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல் சுதீப் ஜெயின் பொறுத்தவரை தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் அவர் ஒன்றிய அரசில் பணிபுரிந்து வருகிறார். 5 பேருக்கும் கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் இதற்கான உத்தரவை வழங்கினார்.
The post தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.