×

வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரியின் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: வண்டலூர் வெளிவட்ட சாலை வரதராஜபுரத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் தாமஸ் (41) என்பவர் உயிரிழந்தார். ஆட்டோ வேகமாக மோதியதால் முன் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் தாமஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் ரத்தம் வெளியேறியது. ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் லோகநாதன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரியின் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur Outer Ring Road ,Chennai ,Thomas ,Varadarajapuram ,Dinakaran ,
× RELATED டோவினோ தாமஸ் ஃபிட்னெஸ்