×

தமிழகம் முழுவதும் போதை மாத்திரை சப்ளை; 2 மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் கைது: 80 பேருக்கு சம்மன்

கோவை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் 2 பேரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் உள்ள 80 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். கோவை கரும்புக்கடை, குனியமுத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு மும்பையில் இருந்து 2 பேர் போதை மாத்திரையை சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மும்பை விரைந்த தனிப்படை போலீசார் அங்கு தாராவியில் பதுங்கி இருந்த நிகில் விகாஷ் (29), அஜய் குமார் (28) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அங்கு மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 340 போதை மாத்திரை மற்றும் ஒரு டைரி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டைரியை ஆய்வு செய்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. தமிழ்நாட்டில், கோவை, திருப்பூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சப்ளை செய்துள்ளனர். இவர்களிடம் தமிழ்நாட்டில் மட்டும் 80 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் அந்த டைரியில் தங்களது வாடிக்கையாளர் முகவரி, செல்போன் எண்களை குறித்து வைத்துள்ளனர். அதனை தனிப்படை போலீசார் கைப்பற்றி அவர்களிடம் போதை மாத்திரை வாங்கிய 80 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

The post தமிழகம் முழுவதும் போதை மாத்திரை சப்ளை; 2 மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் கைது: 80 பேருக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Samman ,KOWAI ,INDEPENDENT POLICE ,KOWAI KEMBUKADAI ,
× RELATED அரசியலில் அடிப்படை அறிவை விஜய்...