×

முன்விரோத தகராறில் இருதரப்பு மோதல் 5 பெண்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 62வது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவரது மகன் சிலம்பரசனும், வியாசர்பாடி ஜே.ஜே.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (24) என்பவரும், முன்விரோத தகராறில் கடந்த மாதம் 24ம் தேதி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பில் இருந்தும் சுமார் 10க்கும் மேற்பட்டோர், கற்கள் மற்றும் கட்டையால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர்.

இதில் இரு தரப்பிலும் சிலர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி, தனுஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியை சேர்ந்த ஷாலினி (25), பூங்கோதை (52), செல்வி (53), உமையாள் (37), ஷோபனா (34) ஆகிய 5 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post முன்விரோத தகராறில் இருதரப்பு மோதல் 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Rajeshwari ,Viasarpadi ,Sathyamurthi Nagar ,62nd Block ,Silambarasan ,Vyasarpadi J. J. R. Santoshkumar ,
× RELATED பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு...