×

ஐயப்ப பக்தர்கள் வருகையால் நெரிசல் 3 மணிநேரம் காத்திருந்து பழநியில் சாமி தரிசனம்

பழநி: ஐயப்ப பக்தர்கள் சீசன் காரணமாக பழநி மலைக்கோயிலில் தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் வார விடுமுறை காரணமாக, நேற்று பக்தர்கள் வருகை மிக அதிகளவு இருந்தது. பக்தர்கள் வந்திருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், மலையடிவார சாலைகளில் அணிவகுத்து நின்றன. இதனால் பாலசமுத்திரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை அடுத்து, மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் தரிசனத்திற்கு சுமார் 3 மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அன்னதான கூடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். பஸ், ரயில் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இனி வரும் காலங்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என மே மாதம் வரை சீசன் காலம் என்பதால், போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கூடுதல் பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஐயப்ப பக்தர்கள் வருகையால் நெரிசல் 3 மணிநேரம் காத்திருந்து பழநியில் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Sami ,Palaniel ,Palani ,Palani Malaikoil ,Dindigul district ,Palani Dandayudapani Swami Temple ,Sami Darshan ,Palaniil ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை