×

சென்னையில் ‘உலக செஸ் சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு’.. தமிழ்நாடு அரசு சார்பில் குகேஷுக்கு நாளை பாராட்டு விழா ஏற்பாடு..!!

சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் டிங் லின்னை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சிங்கப்பூரில் இருந்து குகேஷ் இன்று சென்னை திரும்பினார். சென்னைக்கு வந்த அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து குகேஷை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு கார் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது.

The post சென்னையில் ‘உலக செஸ் சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு’.. தமிழ்நாடு அரசு சார்பில் குகேஷுக்கு நாளை பாராட்டு விழா ஏற்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : World Chess Champion ,Chennai ,Tamil Nadu Government Organizes Appreciation ,Kukesh Tomorrow ,Kukesh ,World Chess Championship 2024 ,Singapore ,Ding Lin ,China ,Tamil Nadu Government ,
× RELATED உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு