- குகேஷ்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- விளையாட்டு
- வளர்ச்சி
- அதுல்யா மிஸ்ரா
- மேகநாதரெட்டி
- உலக சதுரங்கம்
- தின மலர்
சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்மையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் பட்டம் வென்றார். குகேஷக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
The post உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.