×

ஸ்ரீவில்லிபுத்தூரில் திவ்ய பாசுரம் இசைக்கச்சேரி.. ஆண்டாள் கோயில் கருவறைக்குள் சென்றபோது வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியில் பங்கேற்ற இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு ஆடிப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில் இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேறப்பதற்காக வந்திருந்த இளையராஜா ஆண்டாள் கோயிலில் தரிசனத்திற்காக சென்றார். அவருக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஜீயர்கள் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாளன் மாமுனிவர் மடத்தின் சடகோபர் ராஜனுஜர் ஜீயரும் பங்கேற்றனர். அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும், பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார். வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜா கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

The post ஸ்ரீவில்லிபுத்தூரில் திவ்ய பாசுரம் இசைக்கச்சேரி.. ஆண்டாள் கோயில் கருவறைக்குள் சென்றபோது வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா!! appeared first on Dinakaran.

Tags : Divya Pasuram ,Srivilliputhur ,Ilayaraja ,Andal Temple ,Virudhunagar ,Adipur Pandal ,
× RELATED அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த...