×

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் லாரி மோதி பெண் உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர் அருகே கணியம்பாடி பெரியம்பாலம் பகுதியை சேர்த்தவர்கள் பார்த்திபன், அஸ்வினி இவர்கள் இருவரும் அண்ணன், தங்கை. வேலூர் ஆட்சியர் வளாகத்திற்கு செல்ல கூடிய சாலையில் உள்ள எம்.ஆர்.எஃப் கம்பெனிக்கு அருகே உள்ள சாஃப்ட் வர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக பார்த்திபன் அஸ்வினியை வேலைக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் காட்பாடி சாலையில் தர்மராஜா கோவில் அருகே செல்லும் போது பின் வந்த மாநகராட்சி குடிநீர் லாரி மோதி அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பான சிசிடிவி கட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், குடிநீர் லாரியானது இரு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. அதில் முதல் வாகனத்தில் பயணித்த பார்த்திபன், அஸ்வினி சென்றுகொண்டிருந்தனர். மற்றொரு இரு சக்கரவாகனமும் வந்துகொண்டிருந்தது. விபத்தில் பார்த்திபன் இடது பக்கமாகவும் அஸ்வினி வலது பக்கமாகவும் விழுந்தனர். அதில் வலது பக்கமாக விழுந்த அஸ்வினி தலை மீது லாரி எறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஸ்வினியின் உடலை மீட்டு வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் வருகின்றனர்.

The post வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் லாரி மோதி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore orchard ,Vellore ,Bharthiban ,Ashwini ,Ganiyampadi Peryampalam ,M. ,Vellore Ruler Complex ,Soft War Company ,F Company ,Dinakaran ,
× RELATED வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் மாநகராட்சி லாரி மோதி பெண் உயிரிழப்பு