இணைக்கப்படாத கால்வாயில் இருந்து வெளியேறி மணலி விரைவு சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

 

திருவொற்றியூர், டிச.16: திருவொற்றியூர் மண்டத்திற்குபட்ட அனைத்து தெரு, சாலைகளில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன்படி, மணலி விரைவு சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்ட கால்வாய்கள் பல இடங்களில் இணைக்கப்படாமலும், திறந்த நிலையிலும் உள்ளது. இந்த கால்வாய்களை மழை காலத்திற்கு முன்பு இணைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் பல மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, மணலி விரைவு சாலையில் மதுரா நகர் அருகே இணைக்கப்படாமல், திறந்த நிலையில் இருந்த கால்வாய் வழியாக மழைநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். எனவே, திறந்து கிடக்கும் இந்த மழைநீர் கால்வாயை இணைத்து, சீரமைக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இணைக்கப்படாத கால்வாயில் இருந்து வெளியேறி மணலி விரைவு சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: