வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தைலாபுரம் அருகே பழைய கொஞ்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நர்மதா (17). 12ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அனுஸ்ரீ (16), 11ம் வகுப்பு படித்து வந்தார். பழைய கொஞ்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த நரேஷ்(10) 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நேற்று காலை புதுக்குப்பம் கலிங்கல் ஓடையில் தண்ணீர் வருவதை பார்க்க சென்றுள்ளனர். அப்போது, ஏரி நிரம்பியதால் உபரி நீர் அதிகளவு ஓடையில் வெளியேறி சென்று வந்த நிலையில், 3 பேரும் ஓடையில் இறங்கி மறுகரைக்கு செல்ல முற்பட்டுள்ளனர்.
அப்போது மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் நரேஷ் மட்டும் மரத்தை பிடித்து தப்பினான். நர்மதா சடலமாக மீட்கப்பட்டார். அனுஸ்ரீயை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் குளித்தபோது சக்தி (13) என்ற 8ம் வகுப்பு மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு பலியானான்.
The post ஓடையில் அடித்து செல்லப்பட்ட மாணவி, மாணவன் பலி: மற்றொரு மாணவியை தேடும் பணி தீவிரம்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய சிறுவன் appeared first on Dinakaran.