கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வராத கழிவறை கட்டிடம்: மக்கள் அவதி

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலைய வளாகத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை கட்டிடம் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் குளியலறை, கழிப்பறை, மின் மோட்டார் அறை உள்ளிட்ட வசதிகள் இருந்தது. இந்த கழிவறை கட்டிடம் ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் இந்த கழிவறை கட்டிடத்தை கட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்டிடம் பயனற்று கிடக்கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் சார்பில் அர்ப்பணிப்போடு கட்டி கொடுக்கப்பட்ட இந்த கட்டிடம் கட்டுவதற்கு பண விரயம் மட்டுமே ஆகியுள்ளது. எனவே ரயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட கழிவறை கட்டிடத்தை சீரமைத்து விரைவில் திறக்க நடவடிக்ைக எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வராத கழிவறை கட்டிடம்: மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: