495 கிராம் போதைப்பொருளுடன்ஜம்மு சர்வதேச எல்லையில் பாக். டிரோன் பறிமுதல்

ஜம்மு: ஜம்முவின் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப்பொருள் கடத்த முயன்ற பாகிஸ்தானின் டிரோன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவின் மேற்குபகுதியில் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லை வழியே செல்லும் சர்வதேச எல்லையின் 2,290 கிலோமீட்டர் தூரத்தை எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்முவின் சர்வதேச எல்லையான அர்னியா செக்டாரில் உள்ள சைனாஸ் எல்லை வழியாக நேற்று முன்தினம் இரவு நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டின் டிரோன், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து உயர்ரகத்தை சேர்ந்த 495 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 495 கிராம் போதைப்பொருளுடன்ஜம்மு சர்வதேச எல்லையில் பாக். டிரோன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: