ஆயுதங்களை கீழே போட்டு சரணடையாவிட்டால் நசுக்கப்படுவீர்கள்: நக்சலைட்டுகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம்,ராய்ப்பூரில் உள்ள போலீஸ் பரேட் மைதானத்தில் நேற்று நடந்த ஜனாதிபதியின் காவலர் வண்ண விருது வழங்கும் விழாவில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ கடந்த ஆண்டு மாநிலத்தில் 287 நக்சலைட்டுகள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர். சுமார் 1000 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். 837 பேர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர். வரும் 2026 மார்ச்சுக்குள் சட்டீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒழிப்பதில் மாநில அரசும்,ஒன்றிய அரசும் உறுதி பூண்டுள்ளன என்றார்.

பின்னர் ஜக்தால்பூரில் நடந்த பஸ்தார் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா,‘‘தயவுசெய்து ஆயுதங்களைக் கைவிட்டு, பிரதான நீரோட்டத்தில் சேர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் மறுவாழ்வு எங்கள் பொறுப்பு. சரணடைவதற்கான முறையீட்டை நக்சலைட்டுகள் செவிசாய்க்காவிட்டால்,பாதுகாப்புப் படையினரால் நசுக்கப்படுவீர்கள். ர்ச் 31, 2026க்குள் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்ற சட்டீஸ்கர் உறுதிபூண்டுள்ளது’’ என்றார்.

The post ஆயுதங்களை கீழே போட்டு சரணடையாவிட்டால் நசுக்கப்படுவீர்கள்: நக்சலைட்டுகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: