இத்திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள், சுவாமி சந்நதியையும், அம்மன் சந்நதியையும் தரிசித்து முடித்ததும், ‘எல்லாம் நிறைவடைந்தது’ எனக் கருதுகின்றனர். ஆனால், அது முழுமையான தரிசன நிறைவு இல்லை.
இறைவனை தரிசித்த பின், வேறென்ன தரிசிக்க வேண்டியிருக்கிறது என்று நினைக்கத்தோன்றும். ஆம்..! திருக்கோயிலின் ேமற்கு கோபுரத்துக்கு (பே ேகாபுரம்) செல்லும் வழியில் 5ம் பிராகாரத்தின் தென் திசையில் அருள்தருகிறது பரம்பொருளின் திருப்பாதம்.
பாத தரிசனம் வேண்டி அடியார்களும், சித்தர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக, அண்ணாமலையார் சந்நதியில் விஸ்வரூப மூர்த்தி யாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்திருப்பதே திருப்பாதம் என்கின்றனர்.
நினைத்தாலே முக்திதரும் திருவருணை திருக்கோயி லில் தரிசனம் செய்யும் பக்தர்கள், தங்கள் வழிபாட்டின் நிறைவாக இறைவனின் திருப்பாதத்தை வணங்குவது பெரும் பயனைத் தரும். கோயிலில் ‘அண்ணாமலையார் பாதம்’ தனி சந்நதியாகவே அமைந்திருப்பது சிறப்பு.
திருப்பாத சந்நதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பாதத்தைச் சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர் ஆகியோரது திருவுருவங்கள் எழுந்தருளியுள்ளன.
நிசப்தம் தவழும் சூழலில் அமைந்துள்ள திருப்பாத சந்நதியில், கண்மூடி சில நொடி தியானித்தாலே போதும், எல்லா இடையூறும் அகலும்; உள்ளத்தில் இருள் நீங்கி வெளிச்சம் பரவும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அண்ணாமலையார் திருக்கோயிலில் காட்சிதருவதைப் போலவே, மகா தீபம் ஏற்றப்படும் தீபமலையின் உச்சியிலும் இறைவனின் பாதம் அமைந்திருக்கிறது. தீப தரிசனம் காண மலைேயறும் பக்தர்கள், அங்குள்ள பாதத்தை தரிசனம் செய்யலாம்.
The post பரமேஸ்வரனின் பாத தரிசனம்… appeared first on Dinakaran.