சிவகங்கை, டிச.13: சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் சுற்றுலா பயண முகவர்கள், பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா போக்குவரத்து வாகன இயக்குபவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு இது குறித்து கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர் அலுவலகம் என்ற முகவரியிலோ touristofficekaraikudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04565 232348 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சுற்றுலா தொழில் முனைவோர் உரிமம் பெற அறிவுறுத்தல் appeared first on Dinakaran.