×

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ந்தது கோவை

 

கோவை, டிச. 13: இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பணிக்கு செல்பவர்களுக்கும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மாநகரில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், உக்கடம், டவுன்ஹால், வடகோவை, கவுண்டம்பாளையம், கணபதி, ராமநாதபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது. மேலும், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் இருந்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இன்று, நாளை என இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ந்தது கோவை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,southwest Bay of Bengal ,Sri Lankan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மழை நின்றபோதும் வடிகால்களில் வெள்ளம்:...