பொள்ளாச்சி, டிச.12: பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் இன்று(12ம் தேதி) கும்பாபிஷேகத்தையொட்டி,லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் ஆனைமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டது.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் யாக பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று (12ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு ஆறாம் கால வேள்வி வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 7.30 மணியளவில் திருக்குடங்கள் எழுந்தருளல், வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.தொடர்ந்து 9.15 மணிக்கு ராஜகோபுரம், விமானம் கும்பாபிஷேகம்,9.30 மணிக்கு மாசாணி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளைக் காண, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆனைமலையில் குவியத் துவங்கினர்.டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில்,வால்பாறை சரக டிஎஸ்பி ஸ்ரீமதி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.