நெற்கட்டும்செவலில் மரக்கன்றுகள் நடும் பணி

சிவகிரி, டிச.12: வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நெற்கட்டும்செவல் மொட்டைமலை முருகன் கோயில் அடிவாரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டு முதற்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜ், ஒன்றிய கவுன்சிலர் விமலா, மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், பஞ். துணைத் தலைவர் முத்துப்பாண்டி, கிளைச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் குட்டி இலக்குவன் நன்றி கூறினார்.

The post நெற்கட்டும்செவலில் மரக்கன்றுகள் நடும் பணி appeared first on Dinakaran.

Related Stories: