மானூர்,டிச.12: மானூர் ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மானூர் ஒன்றிய தலைவி கனிமொழி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கலாராணி, பொருளாளர் ராணி, துணைத்தலைவர் சுப்புலட்சுமி, இணைசெயலாளர் கிருஷ்ணம்மாள் உள்பட 50க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
The post சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.