திருச்செந்தூர் கோயில் விடுதியில் மதுரை பக்தரின் சடலம் மீட்பு

திருச்செந்தூர், டிச. 12: மதுரை வலையங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (57), மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 30ம் தேதி மாலை பாலசுப்பிரமணியன் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நிர்வகிக்கப்படும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். 10 நாட்கள் ஆகியும் அறையை பாலசுப்பிரமணியம் காலி செய்யாததால் விடுதி மேலாளர் செல்வம் பணியாளர்களுடன் சென்று நேற்று முன்தினம் இரவு பார்த்துள்ளார். அப்போது அறையில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஏஓ முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பாலசுப்பிரமணியம் உடலை மீட்டனர். அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருச்செந்தூர் கோயில் விடுதியில் மதுரை பக்தரின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: