×

மாநிலங்களவை தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார். 1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. மாநிலங்களவை தலைவரின் செயல்பாடுகள் அந்தப் பதவியின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. தன்கர் எதிர்க்கட்சி தலைவர்களை பேசவிடாமல், அடிக்கடி ஆளும் அரசாங்கத்தை புகழ்ந்து பேசுகிறார். மாநிலங்களவை தலைவர் தன்கர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.

The post மாநிலங்களவை தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : President ,Mallikarjuna Karke ,Delhi ,Congress ,Mallikarjuna Gharke ,Jagdeep Tankar ,Dinakaran ,
× RELATED சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, காங்....