- மல்லிகார்ஜுனா கர்கே
- ஜகதீப் தாங்கர்
- தில்லி
- காங்கிரஸ்
- ஜக்தீப் தங்கர்
- மல்லிகார்ஜுனா கர்கே
- தங்கர் பள்ளி
- மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; மாநிலங்களவை தலைவர் தன்கர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். மாநிலங்களவையில் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி தலைவர்களை பேசவிடாமல் தடுக்கிறார். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் செயல்படுகிறார்.
இதற்கு முன்பு இருந்த மாநிலங்களவை தலைவர்கள் அரசியல் சார்பற்று செயல்பட்டனர். அவையிலேயே பிரிவினையை உண்டாக்கும் வகையில் ஜெகதீப் தன்கர் செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளை வசைபாடும்படி ஆளும் கட்சியினரை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தூண்டி விடுகிறார். ஆளும்கட்சியினரின் பெயரை குறிப்பிட்டு இதற்கு என்ன கூறப் போகிறீர்கள் என ஜெகதீப் தன்கர் பேச வைப்பதாக கார்கே குற்றச்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை 2 நிமிடம் கூட சேர்ந்தாற்போல் பேச அனுமதிப்பது இல்லை. அவை முன்னவருக்கு நிகரான மதிப்பை எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால் எப்போது எழுந்தாலும் பேச அனுமதிக்க ஜெகதீப் தன்கர் மறுக்கிறார். மிகவும் பாரபட்சமாக மாநிலங்களவை தலைவர் நடந்து கொள்வதாகவும் கார்கே விமர்சனம் செய்துள்ளார். அவை நடவடிக்கைகளை வேண்டுமென்றே பாஜக உறுப்பினர்கள் முடக்குகின்றனர். கட்சி பாகுபாடின்றி செயல்படுவேன் என்று கூறியதை ஜெகதீப் தன்கர் கடைப்பிடிக்க தவறிவிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை விரோதி போல் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பார்ப்பதாக கார்கே காட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியல்சாசனத்துக்கு எதிராகவும், விதிமுறைகளுக்கு மாறாகவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் செயல்படுகிறார். மாநிலங்களவை தலைவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக செயல்பட வேண்டும். மாநிலங்களவை தலைவரின் செயல்பாடுகள் அந்தப் பதவியின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. தன்கர் எதிர்க்கட்சி தலைவர்களை பேசவிடாமல், அடிக்கடி ஆளும் அரசாங்கத்தை புகழ்ந்து பேசுகிறார். 1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. மாநிலங்களவை தலைவரின் செயல்பாடுகள் அந்தப் பதவியின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. தன்கர் எதிர்க்கட்சி தலைவர்களை பேசவிடாமல், அடிக்கடி ஆளும் அரசாங்கத்தை புகழ்ந்து பேசுகிறார் என கார்கே தெரிவித்தார்.
The post எதிர்க்கட்சிகளை விரோதியாக பார்க்கிறார்.. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.