இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு, மதுபோதையில் சூதாடியுள்ளனர். அப்போது, புஷ்பராஜ் தொடர்ந்து தோற்றுக்கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே, இருவருக்கும் சூதாடுவதில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இருந்து வந்த நிலையில் புஷ்பராஜ் தொடர்ந்து தோற்றுக்கொண்டே வந்தபோது, அதற்கான பணத்தை சூர்யா கேட்டுள்ளார். அப்போது, மதுபோதையில் தோல்வியின் விரத்தியில் இருந்த புஷ்பராஜ், சூர்யாவிடம் கடும் வாக்கவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தபோது, மாலை கட்டியபிறகு அதை அறுப்பதற்காக வைத்திருக்கும் கத்தியை எடுத்து சூர்யாவை வெட்டியுள்ளார். இதனால் ரத்தம் வெள்ளத்தில் சூர்யா மயங்கி விழுந்துள்ளார். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர், பலத்த காயமநை்த சூர்யாவை மீட்டு தண்டலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், நண்பனை கத்தியால் வெட்டிய புஷ்பராஜ் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுபோதையில் சூதாடியபோது பிரச்னை நண்பனை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.