இதுபற்றி மாணவியின் தாய் கொடுத்த புகாரின்படி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை மீட்டு கெல்லிசில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே காப்பகத்தில் இருந்து ஸ்வேதாவை வீட்டிற்கு அழைத்துவந்தனர். இதன்பிறகு மாணவி, வாலிபருடன் பேசிவந்ததால் பவானியின் தாய் வீட்டில் மாணவியை தங்கவைத்ததனர்.
இங்கிருந்து நேற்று மதியம் மாணவி, வாலிபருடன் செல்போனில் பேசியதால் பாட்டி விஜயா, சித்தி கலைவாணி ஆகியோர் செல்போனை வாங்கிவைத்துக்கொண்டு மாணவியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டனர். அவர்கள் மாலை 6 மணிக்கு வந்தபோது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
இதுபற்றி அறிந்ததும் எம்கேபி.நகர் போலீசார் வந்து மாணவியின் உடலை ஸ்டான்லி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக அயனாவரம் ஏகாங்கிபுரம் மெயின் தெரு பகுதியை சேர்ந்த வசந்தகுமாரை (20) கைது செய்தனர்.
The post காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு..? மாணவி தூக்கிட்டு சாவு: போக்சோவில் காதலன் கைது appeared first on Dinakaran.