×

மசூதிகளை கணக்கெடுக்க கோரும் வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் மதுராவிற்கு பின் சம்பலில் 16வது நூற்றாண்டை சேர்ந்த மசூதியை ஆய்வு செய்வதற்கு கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆய்வுக்காக அதிகாரிகள் சென்ற நிலையில் அங்கு வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து அஜ்மீரில் உள்ள நீதிமன்றத்திலும் ஷெரீப் தர்கா குறித்து இதே போன்ற மனு விசாரணைக்கு வந்தது. இதுபோன்ற வழக்குகளை தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் தலையிடாதது துரதிஷ்டவசமானது. அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சட்டத்தை மீறும் சட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்வி வைப்பதற்கு உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மசூதிகளை கணக்கெடுக்க கோரும் வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Marxist ,New Delhi ,Politburo ,Communist Party ,Communist Party of India ,Sambal ,Varanasi ,Mathura ,Uttar Pradesh ,Communist ,Dinakaran ,
× RELATED டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட...