மஞ்சப்பூரில் சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

பல்லடம்: பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி மஞ்சப்பூர் கிராமத்திற்கு கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமப்புற இணைப்பு சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராமப்புற இணைப்பு சாலைக்கு செல்ல மக்கள் சிரமம் ஏற்படும் என்பதால் சாலையில் மையத்தடுப்பு அப்பகுதியில் அமைக்காமல் வாகனங்கள் சென்று வர சாலையில் இடைவெளி விட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த வந்த நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் அஞ்சலி,அவினாசிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்கு கிராமப்புற இணைப்பு சாலை பகுதிகளில் மையத்தடுப்பு அமைக்க மாட்டோம். அக்கால கட்டத்தில் சாலை விபத்துக்கள் நிகழ்ந்தால் மையத்தடுப்புகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். இதனால் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

The post மஞ்சப்பூரில் சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: