தற்போது உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், மலர் நாற்றுக்களை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால், தற்போது ெதாட்டிகளில் நடவு செய்யப்படுள்ள பல்வேறு வகையான மலர் நாற்றுகள் கருகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, இந்த மலர்செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு அரண் அமைத்து மறைக்கப்பட்டு வருகிறது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் நேரங்களில் தொழிலாளர்கள் தண்ணீர் தெளித்து மலர் செடிகள் பனியில் கருகாமல் காத்து வருகின்றனர். பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அலங்கார செடிகளும் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை மற்றும் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உறை பனியில் கருகாமல் இருக்க மலர் நாற்றுகளுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.