விஜய் தன்னபிக்கையோடு கட்சி தொடங்கவில்லை.. அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது: விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சனம்!!

சென்னை: நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தன்னபிக்கையோடு கட்சி தொடங்கவில்லை என்று யாரோ ஒரு சிலர் கூறித்தான் கட்சி ஆரம்பித்து இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தெரிவித்து இருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன், விரிவான அறிக்கை கொடுத்த பிறகும் அவர் குறித்து விஜய் பேசி இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ரவிக்குமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள். ‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது! என்று விஜய்க்கு ரவிக்குமார் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

The post விஜய் தன்னபிக்கையோடு கட்சி தொடங்கவில்லை.. அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது: விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சனம்!! appeared first on Dinakaran.

Related Stories: