வேதாரண்யம்,டிச.7: வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் வேதாரண்யம் பேருந்து நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம், வேதாரண்யம் நகர செயலாளர், நகர்மன்றத் தலைவர் புகழேந்தி, வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சதாசிவம், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம்.வே.முருகையன்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பாரிபாலன், மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி சத்யமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி அன்பரசு, மாவட்ட ஆதிதிராவிட நல குழு தலைவர் முருகேசன், இளைஞர் அணி சுரேஷ், முன்னாள் நகர செயலாளர் கோவி.அன்பழகன், வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளிட்ட மாவட்ட, நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
The post வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.