கடையநல்லூர்,டிச.19: தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனுக்கு கடையநல்லூரில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் அப்பாஸ், தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ், அவைத் தலைவர் பெட்டி முருகையா, நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவூது, திரிகூடபுரம் பஞ். துணைத் தலைவர் செய்யது மீரான், ஒன்றிய அவைத் தலைவர் பூரணச்சந்திரன், நயினாரகரம் பெருமாள் கோவில் அறங்காவலர் குமார், ஜப்பார், செய்யது மசூது, பேச்சாளர் சாகுல் ஹமீது, சுந்தரபாண்டியபுரம் முருகன், நல்லையா, மதியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் கணேசன் வருகை appeared first on Dinakaran.