×

கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளரின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்

 

கோபி,டிச.6: கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகனின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகனின் தந்தை அருணாச்சலம்(80). இவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.

ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகனுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பெருமாள்சாமி, மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன், வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் கொங்கர்பாளையம் சண்முகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் குமணன், கோபி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

The post கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளரின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Gobi South Union DMK ,Gobi ,Siruvalur Murugan ,Arunachalam ,Dinakaran ,
× RELATED கோபி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது