விளத்தூரில் புதிய சுகாதார வளாகம் திறப்பு

பரமக்குடி, டிச. 6: தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கழிப்பறை தினத்தையொட்டி கழிப்பறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் வரும் கிராமங்களில் 19.11.2024 முதல் 10.12.2024 முடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் விளத்தூர் கிராம ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகத்தை பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி/ஊ) தேவபிரியதர்ஷினி திறந்து வைத்தார்.பரமக்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் தினகரன் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி வாசித்தார். எஸ்.பி.எம் ஆலோசகர் அபராஜிதா பொதுமக்களிடம் கழிப்பறை சுகாதாரத்துடன் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், விளத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் அருளானந்து, ஊராட்சி செயலர் காளீஸ்வரி ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post விளத்தூரில் புதிய சுகாதார வளாகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: