- மகாராஷ்டிரா
- புனே
- சரத்பவார் கட்சி
- உத்தம ஜாங்கர்
- பாஜக
- ராம் சத்புதேவ்
- மல்ஷிராஸ்
- சோலாப்பூர் மாவட்டம்
- மார்க்கட்வாடி
- தின மலர்
புனே: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள மல்ஷிராஸ் தொகுதியில் சரத்பவார் கட்சி வேட்பாளர் உத்தம் ஜங்கர், பாஜ வேட்பாளர் ராம் சத்புதேவை வீழ்த்தினார். மார்கட்வாடி கிராமத்தில் பதிவான 1900 வாக்குகளை எண்ணும் போது உத்தம் ஜங்கர் 843 வாக்குகளையும், பாஜ வேட்பாளர் சத்புதே 1,003 வாக்குகளையும் பெற்றார். இது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களையே அதிர்ச்சிக்கு ஆழ்த்தியதோடு, மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியது. வாக்குச் சீட்டு மூலம் இந்த கிராமத்தில் மறு தேர்தல் நடத்த முடிவெடுத்த கிராம வாசிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கிராமவாசிகள் 88 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post மகாராஷ்டிராவில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த முயன்ற 88 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.