1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மொத்த சேத மதிப்பு ரூ.614,88,14,532 என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் நேரடி பணப்பரிமாற்றம் அடிப்படையில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளேன். எனவே இதற்காக ரூ.177 கோடி தேவைப்படுகிறது. பெரும்பாலான சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளது.
எனவே சாலைகள் அமைப்பதற்கு ரூ.427 கோடியை அனுமதிக்க வேண்டும். சேதங்கள் குறித்த விரிவான அறிக்கை உரிய நேரத்தில் பிரதமருக்கு சமர்ப்பிக்கப்படும். எனவே, சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை உடனடியாக அனுப்பி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கான நிதியை புதுச்சேரிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதற்கட்டமாக ரூ.600 கோடியை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
The post பெஞ்சல் புயல் சேதம் புதுச்சேரிக்கு ரூ.600 கோடி விடுவிக்க வேண்டும்: மோடிக்கு ரங்கசாமி கடிதம் appeared first on Dinakaran.