இன்னும் மையம் கொண்டிருக்கிறது, தரைப்பகுதியில் மையம் கொண்டிருக்கிறது என்று மாற்றி மாற்றி ஒன்றிய அரசின் வானிலை தகவல்களை ஏன் கூறினார்கள் என்ற கேள்வி எழுகிறது. கேரளா வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணில் புதைந்தார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் நாங்கள் ஒருவாரத்திற்கு முன்பே கேரள அரசுக்கு எச்சரிக்கை செய்தோம்.
கேரளா அரசு அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டது என்று குற்றம் சாட்டினார். அதேபோல ஏன் முன்கூட்டியே தமிழக அரசாங்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எச்சரிக்கை விடுக்கவில்லை. கண்டும் காணாமல் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு கைவிட்டு விட்டதா?. கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்பி இருக்கிறார் என்பதால் கைவிட்டு விட்டதா?. இதற்கு பாஜ தலைவரும், ஒன்றிய அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும். மக்கள் வேதனையில் இருக்கும் இந்த சமயத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்றார்.
The post வெள்ளம் பாதித்த கடலூர் பகுதியில் செல்வப்பெருந்தகை நிவாரண உதவி appeared first on Dinakaran.