இதனால் அச்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். மீண்டும் இரவில் தீவிர ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் பிரிட்டோ மற்றும் மேஜோவுக்கு சொந்தமான 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீனவர்களான பெட்ரிக்நாதன் (37), ஜான் இம்மரசன் (38), அந்தோணி லிஸ்பன் (24), நிஷாத் (25), பரலோக மேட்டன் வினித் (24),
யோபு (15), ஆரோக்கியம் (58), பிரசாந்த் (56), முனீஸ்வரன் (21), ராபின்ஸ்டன் (41), அரவிந்த் பாண்டி (24), ராஜபிரவு (27), ரிபாக்சன் (26) அருள் பிரிட்சன் (29) ஆகிய 14 பேரை சிறை பிடித்தனர். கடந்த 3ம் தேதி காரைக்கால் மீனவர்கள் 18 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் அத்துமீறல்கள் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
The post இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது: 2 விசைப்படகுகள் பறிமுதல் appeared first on Dinakaran.