கோவையில் தங்க நகை தொழில்பூங்கா அமைக்க டெண்டர்

சென்னை: கோவைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் சென்று இருந்தார். அப்போது, கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்று தங்க நகை தொழில்புரியும் பொற்கொல்லர்களை சந்தித்து குறைகளை, கோரிக்கைகளை கேட்டறிந்தார். கோவை மாநகரில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதையடுத்து, கோவையில் தங்க நகை பூங்கா வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை தங்க நகை தொழிலாளர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து, பெரியார் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பு தங்க நகை தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 3.41 ஏக்கரில் தங்க நகை தொழில் பூங்கா அமைய உள்ளது.

The post கோவையில் தங்க நகை தொழில்பூங்கா அமைக்க டெண்டர் appeared first on Dinakaran.

Related Stories: